search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ராணுவ மேஜர்"

    அசாம் போலி என்கவுண்டர் தொடர்பாக 24 ஆண்டுகளாக நடைபெற்ற வழக்கில், ராணுவ அதிகாரிகள் 7 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. #AssamFakeEncounter
    கவுகாத்தி:

    அசாம் மாநிலத்தில் கடந்த 1994-ஆம் ஆண்டில் தேயிலை நிறுவனத்தின் மேலாளர் ஒருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடையதாக 9 இளைஞர்களை ராணுவத்தினர் தங்களது காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். அதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்த நீதிமன்றம் இளைஞர்களை நேரில் ஆஜர் செய்யுமாறு உத்தரவிட்டது. இதையடுத்து, அவர்களில் 4 பேர் விடுவிக்கப்பட்டனர். மற்ற ஐந்து பேரும் ராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

    தற்காப்பு முயற்சிக்காக அவர்களை சுட்டதாக  ராணுவம் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது. ஆனால், இது போலி என்கவுண்டர் என்றும், திட்டமிட்டு செய்யப்பட்ட படுகொலை என்றும் குற்றம்சாட்டிய பாஜக நிர்வாகி ஜெகதீஷ் புயான், ராணுவ நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.

    இந்த விவகாரத்தில் ராணுவ மேஜர் ஏ.கே.லால், கர்னல்கள் தாமஸ் மேத்யூ, ஆ.எஸ்.சிபிரென், கேப்டன்கள் திலிப் சிங், ஜெகதேவ் சிங், நாய்க்ஸ் அல்பிந்தர் சிங், சிவேந்தர் சிங் ஆகிய ஏழு பேருக்கும் தொடர்பு இருப்பதாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.

    இதுதொடர்பான விசாரணை பல ஆண்டுகளாக நீடித்து வந்த நிலையில், கடந்த ஜூலையில் அதன் இறுதி வாதம் நிறைவடைந்தது. இந்நிலையில், அந்த வழக்கின் மீது சனிக்கிழமை தீர்ப்பளிக்கப்பட்டது. போலி என்கவுண்டரில் தொடர்புடைய ஏழு அதிகாரிகளும் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளித்த ராணுவ நீதிமன்றம், அவர்களுக்கு ஆயுள் தண்டனை விதித்தது. #AssamFakeEncounter

    ஸ்ரீநகரில் உள்ள ஓட்டல் ஒன்றில் இளம்பெண்ணுடன் நுழைந்து தகராறு செய்த ராணுவ மேஜர் லீதுல் கோகோய் மீதான குற்றம் ராணுவ கோர்ட்டில் உறுதியாகியுள்ளதால், அவர் தண்டனையை எதிர்நோக்கியுள்ளார். #MajorGogoi #MajorGogoiGuilty #Army
    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகர் தொகுதிக்கு கடந்தாண்டு நடந்த இடைத்தேர்தலின் போது, பொதுமக்கள் பாதுகாப்பு படையினர் மீது கல்வீச்சில் ஈடுபட்டனர். அப்போது, ராணுவ மேஜர் லீதுல் கோகோய் அங்குள்ள இளைஞர் ஒருவரை பிடித்து தனது ஜீப்பில் கட்டி ஊர்வலமாக சென்றார். இந்த சம்பவம் கடும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    கடந்த மே மாதம் ஸ்ரீநகரில் உள்ள ஒரு ஓட்டலுக்கு இளம்பெண்ணுடன் லீதுல் கோகோய் நுழைந்து தகராறு செய்தார். இதனை அடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். அவர் மீதான விசாரணை ராணுவ கோர்ட்டில் நடந்து வந்த நிலையில், கோகோய் மீதான குற்றச்சாட்டு உறுதியாகியுள்ளது.

    இதன் காரணமாக அவர் தண்டனையை எதிர்நோக்கியுள்ளார். ராணுவ கோர்ட் தனது விசாரணை அறிக்கையை ராணுவ தலைமையகத்திடம் கொடுத்துள்ளதாகவும், விரைவில் அவருக்கு தண்டனை அறிவிக்கப்படும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
    காஷ்மீரில் இளைஞரை ஜீப்பில் கட்டி ஊர்வலமாக சென்று பரபரப்பை ஏற்படுத்திய ராணுவ மேஜர், ஓட்டல் ஒன்றில் இளம்பெண்ணுடன் நுழைய முயன்று ரகளை செய்ததற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.
    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகர் தொகுதிக்கு கடந்தாண்டு நடந்த இடைத்தேர்தலின் போது, பொதுமக்கள் கல்வீச்சில் ஈடுபட்டனர். அப்போது, ராணுவ மேஜர் லீதுல் கோகோய் அங்குள்ள இளைஞரை பிடித்து தனது ஜீப்பில் கட்டி ஊர்வலமாக சென்றார். இந்த சம்பவம் கடும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்நிலையில், சமீபத்தில் ஸ்ரீநகரில் உள்ள ஒரு ஓட்டலுக்கு இளம்பெண்ணுடன் லீதுல் கோகோய் சென்றுள்ளார். ஆனால், அந்த பெண் உள்ளூரை சேர்ந்தவர் என்பதால், ஓட்டல் நிர்வாகம் அவரை அனுமதிக்க மறுத்துள்ளது. இதனை அடுத்து, கோகோய் மற்றும் அவரது டிரைவர் ஓட்டல் ஊழியர்களிடம் தகராறு செய்துள்ளார்.

    பின்னர், போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்ட பின்னர், கோகோயை கைது செய்து போலீசார் அழைத்துச் சென்றனர். இது தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. 
    ×